டில்லி:

ஜாலியன் வாலாபாக் படுகொலை 100வது ஆண்டு நினைவு நாளையொட்டி, இன்று இந்தியரிசர்வ் வங்கி  100 ரூபாய் நாணையத்தை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்த நாணயத்தை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வெளியிட்டார்.

ஜாலியன் வாலாபாக் படுகொலை நடைபெற்று  100வது ஆண்டு நினைவு நாள் இன்று அணுசரிக்கப் படுகிறது.   பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள நினைவு தூணுக்கு ராகுல் காந்தி உள்பட தலைவர்கள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு ஜாலியன் வாலாபாக்கில் உள்ள நினைவுத்தூணில் மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து நடைபெற்ற எளிமையான நிகழ்ச்சியில்,  ரூ.100 நாணயத்தை வெளியிட்டார். அதுபோல ஜாலியான் வாலாபாக் நினைவு தூண் கொண்ட  தபால்தலையும் வெளியிடப்பட்டது.

இந்த 100ரூபாய் நாணயத்தின் ஒருபுறம் அசோக சின்னமும், மற்றொருபுரம் ஜாலியன் வாலாபாக் நினைவு தூணும் இடம்பெற்றுள்ளது.

அமிர்தசர், பஞ்சாப்: துணை ஜனாதிபதி மு.க. வெங்கய்யா நாயுடு வெளியிட்டுள்ள நினைவுச்சின்ன தபால் முத்திரை 100 ஆண்டுகால படுகொலை நினைவு தினத்தன்று # ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தில் வெளியிடப்பட்டது.