கிழிந்த மற்றும் அழுக்கடைந்த நோட்டுக்களை எப்படி மாற்றுவது?
டில்லி
கிழிந்த மற்றும் அழுக்கடைந்த நோட்டுக்களை மாற்றுவது குறித்த விதிகளை தற்போது ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
நம்மில் பலரிடம் கிழிந்த அல்லது அழுக்கடைந்த ரூபாய் நோட்டுக்கள் இருக்கும். பொதுவாக இத்தகைய நோட்டுக்களை எந்த ஒரு வர்த்தக நிறுவனமும் பெற்றுக் கொள்வதில்லை. அதனால் அத்தைகைய நோட்டுக்கள் சிலரிடம் பெருமளவில் சேர்ந்து விடுகிறது. இந்த நோட்டுக்களை மாற்றுவதற்கான புதிய விதிகளை தற்போது ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், “செல்லாத நோட்டுக்கள் மூன்று வகைப்படும். அதில் முதலாவது சரியில்லாத நோட்டுக்களாகும். இதில் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழுக்கடைந்து மற்றும் துவைக்கும் போது சுருங்கி விடுவது போன்றவை அடங்கும். இரண்டாவது ஒரு சில பகுதிகள் இல்லாத அளவு கிழிந்து போன நோட்டுக்கள் ஆகும். மூன்றாவது வகையில் இரண்டாக கிழிந்து தவறுதலாக இரு வேறு நோட்டுக்கள் ஒட்டப்பட்டவைகள் ஆகும்.
இவ்வகை நோட்டுக்களில் முதல் வகை நோட்டுக்கள் அனைத்து வங்கிகளிலும் அந்த வங்கிகளின் விதிக்கேற்ப மாற்றிக் கொள்ளலாம். மூன்றாம் வகை நோட்டுக்கள் மாற்றத்தக்கவை அல்ல. தற்போது இரண்டாம் வகை நோட்டுக்களை மாற்றுவதில் ஒரு சில விதிகள் சேர்க்கபட்டுள்ளன
ரூ. 50 க்கும் குறைவான மதிப்புள்ள கிழிந்த நோட்டுக்கள் : கிழிந்த நோட்டுக்களின் தற்போது உள்ள நோட்டுக்களின் பகுதியில் வரிசை எண் சரியாக தெரிய வேண்டும். அடுத்த படியாக கிழிந்த நோட்டுக்களின் பகுதி மொத்த நோட்டுகளின் பரப்பளவில் 50% மேலிருந்தால் அதன் பரப்பளவுக்கு ஏற்றபடி மதிப்பிலான பணம் திருப்பி அளிகபடும். அதே நேரத்தில் 50%க்கு குறைவாக இருந்தால் அத்தைகைய நோட்டுக்கள் மாற்றப்பட இயலாது.
ரூ. 50க்கு மேற்பட்ட மதிப்புள்ள கிழிந்த நோட்டுக்கள் : இத்தகைய நோட்டுக்களில் கிழிந்த நோட்டுக்களின் பகுதி அதன் மொத்த பரப்பளவில் 80% க்கு மேல் இருந்தால் அந்த நோட்டுக்களின் முழு மதிப்பையும் திரும்ப பெறலாம். அதே நோட்டுக்கள் 80%க்கு குறைவாகவும் 40%க்கு அதிகமாகவும் இருந்தால் அந்த நோட்டுக்கலின் மதிப்பில் 50% திரும்ப பெறலாம். 40%க்கு குறைவாக உள்ள நோட்டுக்கள் மாற்றத்தக்கது அல்ல.” என குறிப்பிடப்பட்டுள்ளது.