மீண்டும்…  வருது புதிய 500 ரூபாய் நோட்டு!!

டில்லி:

புதிய 500 ரூபாய் நோட்டை வெளியிடப்போவதாக ஆர்.பி.ஐ. அறிவித்துள்ளது.

கடந்த வருடம்  செப்டம்பர் 8 ஆம் தேதி பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை தடை செய்து புதிய நோட்டுக்களை மத்திய அரசு உத்தரவிட்டது. பிறகு புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இந்த நிலையில் காந்தி படம் தாங்கிய புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் விடப்படும் என்று இன்று ஆர்பிஐ அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஆர்பிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், ”புதிய 500 ரூபாய் நோட்டில் காந்தி படமும் இருக்கும். புதிதாக A என்ற ஆங்கில எழுத்து மட்டும் சேர்க்கப்படும்.  இந்த ஆங்கில எழுத்து number panelகளுக்கு அருகில் இருக்கும். ஆர்பிஐ கவர்னர் டாக்டர் உர்ஜித் பட்டேலின் கையெழுத்தோடு,  2017 என்று அச்சிடப்பட்டு இருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது புழக்கத்தில் இருக்கும் புதிய 500 ரூபாய் நோட்டில் E என்ற ஆங்கில எழுத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.