சரிந்தது தமிழகம்!: ரிசர்வ் வங்கி அதிர்ச்சி அறிக்கை!

சென்னை

மிழகத்தின் உற்பத்தித்துறை வளர்ச்சி கணிசமாகக் குறைந்திருப்பதாக ரிசர்வ் வங்கி  வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகளால் மாநிலத்தின் உற்பத்தித்துறை வளர்ச்சி பெறும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.  ஆனால் போதிய முதலீடுகள் வரவில்லை. வந்த சில முதலீடுகளும் வேறு மாநிலங்களுக்குச் சென்றுவிட்டன.

 

இதனால் தமிழக உற்பத்தித்துறை வளர்ச்சி முன்பைவிட  குறைந்துவிட்டது என்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிதியாண்டின் தமிழக உற்பத்தித்துறை வளர்ச்சி 1.65 சதவீதமாகக் குறைந்துள்ளதாக  அந்த ஆய்வு அறிக்கை  தெரிவிக்கிறது.

தமிழகத்தின் வளர்ச்சி நிலை கடந்த நிதியாண்டில் 7. 11% வளர்ச்சி அடைந்திருந்தது, தற்போது அதளபாதாளத்துக்கச் சென்றுவிட்டது.

இங்கு நிலவும் நிலவும் நிச்சயமற்ற அரசியல் சூழல்தான்  இந்த உற்பத்தித்துறையின் சரிவுக்குக் காரணம் என்று  பொருளாதார  அறிஞர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.