Random image

10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தங்கம் வாங்கும் ரிசர்வ் வங்கி

மும்பை

டந்த 2009 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய ரிசர்வ் வங்கி மீண்டும் தங்கம் வாங்க உள்ளது.

உலகில் உள்ள பல நாடுகளின் மத்திய வங்கிகளில் தங்கம் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது.   அந்த தங்கத்தின் மதிப்புக்கிணங்க நாட்டின் நாணய மதிப்பும் மாறும்.  இம்முறையை இந்திய ரிசர்வ் வங்கி  உள்ளிட்ட பல வங்கிகள் கடை பிடித்து வந்தன.   கடந்த 2009  ஆம் ஆண்டுக்கு பிறகு ரிசர்வ் வங்கி தங்கம் வாங்குவதை முழுவதுமாக நிறுத்தி விட்டது.

எனவே கடந்த 9 வருடங்களாக இந்திய ரிசர்வ் வங்கியிடம் தங்க இருப்பு 566.23 மெட்ரிக் டன்களாகவே இருந்து வருகிறது.  சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருவதால் சென்ற வருடம் இந்திய ரிசர்வ் வங்கி தங்க இருப்பை அதிகரிக்க முடிவு செய்தது.

அதன்படி இந்திய ரிசர்வ் வங்கி இனி தனது தங்க இருப்பை மேலும் அதிகரிக்கும் என அறிவித்துள்ளது.   கடந்த 2009 ஆம் வருடம் நவம்பர் மாதம் ரிசர்வ் வங்கி 200 டன் தங்கம் வாங்கியதே கடைசியாக வாங்கியதாகும்.