ஐதராபாத் அணிக்கான வெற்றி இலக்கு 163 ரன்கள்!

--

துபாய்: ஐதராபாத் அணிக்கு எதிராக, பெங்களூரு அணி 20 ஓவர்களில் 163 ரன்களை எடுத்துள்ளது.

முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணியில், தேவ்தத் படிக்கல் 42 பந்துகளில் 56 ரன்களை அடித்தார். ஆரோன் பின்ச் 29 ரன்களுக்கும், கோலி 14 ரன்களுக்கும் நடையைக் கட்டினர்.

டி வில்லியர்ஸ் 30 பந்துகளில் 51 ரன்களை அடித்தார். இறுதியில், 5 விக்கெட்டுகளை இழந்து அந்த அணியால் 163 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.

அந்த அணியின் முதல் 10 ஓவர்கள் ஆட்டத்தின்படி, அது 200 ரன்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த அணியால் அதிரடியைத் தொடர முடியவில்லை. டிவில்லியர்ஸ் மற்றும் ஷிவம் துபே இருவரும் ரன்அவுட் செய்யப்பட்டார்கள்.