னந்த்

குஜராத் மாநிலம் ஆனந்த் தொகுதியில் ஒரு வாக்குச் சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் உள்ள மக்களவை தொகுதியான ஆனந்த் தொகுதியில் பாஜகவின் மிதேஷ் படேல் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பரத்சிங் சோலங்கி ஆகியோர் போட்டியிடுகின்றனர். கடந்த 2014 ஆம் வருட தேர்தலில் குஜராத் மாநிலத்தின் 26 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெற்ற பாஜக ஆனந்த் தொகுதியில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த தொகுதியில் ஏற்கனவே வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. அப்போது தர்மாஜ் பகுதியில் அமைந்துள்ள ஒரு வாக்குச்சாவடியில் கள்ள வாக்குகள் நிறைய பதிவானதாக குற்றம் சாட்டப்பட்டது. இதை தேர்தல் ஆணையத்துக்கு தொகுதி தேர்தல் அதிகாரி உறுதி செய்துள்ளார். இதை ஒட்டி இந்த வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுளது.

மத்திய ஆளும் கட்சியானபாஜக  ஆட்சி செய்து வரும் குஜராத் மாநிலத்தில் மறு வாக்குப்பதிவு நடப்பது இந்த தேர்தலில் இதுவே முதல் முறையாகும். இந்த மறுவாக்குப்ப்பதிவு வரும் 12 ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இந்த பகுதியில் காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது.