திரிபுரா மேற்கு மக்களவைத் தொகுதியில் மறுவாக்குப் பதிவு

அகர்தலா: திரிபுரா மேற்கு நாடாளுமன்ற தொகுதியின் 26 சட்டமன்ற தொகுதிகளில் அடங்கிய 168 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடத்த தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

ஆளுங்கட்சியான பாரதீய ஜனதா, இத்தொகுதியில் பெரியளவிலான தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டதாக கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஏப்ரல் 11ம் தேதி முதற்கட்ட தேர்தலில் இத்தொகுதியில் நடந்த வாக்குப்பதிவில் 83% வாக்குகள் பதிவாகியிருந்தன. தற்போது மே 12ம் தேதி அத்தொகுதியில் மறுவாக்குப் பதிவு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-