Random image

விரைவில்100 அடியை எட்டுகிறது: மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 96ஆயிரம் கனஅடி நீர் வருகை

மேட்டூர்:

ர்நாடகாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தமிழகத்திற்கு வினாடிக்கு 1.15 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 96  ஆயிரம் கனநீர் வந்துகொண் டிருக்கிறது. இதன் காரணமாக விரைவில் மேட்டுர் அணை 100 அடி எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடக அணைகள் முழு கொள்ளளவை நெருங்கியதையடுத்து, தமிழகத்திற்கு அதிகப்படியான உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழகத்திற்கு விநாடிக்கு 80 ஆயிரம் கனஅடி தண்ணீர் மற்றும் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு ஒரு லட்சம் கனஅடியைத் தாண்டியுள்ள நிலையில் ஒகேனக்கல்லில் அருவிகளையே மூழ்கடிக்கும்படி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 60 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.

மேலும் அணையின் நீர் இருப்பு 50.306 டிஎம்சி-யாகவும் நீர் வெளியேற்றம் 1000 கன அடியாகவும் இருந்து வருகிறது. ஒரே நாளில் மேட்டூர் அணையின் நீர்மட்டம்  84.7 அடியில் இருந்து 87.92 அடியாக உயர்ந்து உள்ளது.

இதன் காரணமாக   கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி உத்தரவிட்டுள்ளார். மேலும் அவசர உதவிக்கு 1077 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என கூறியுள்ளார்.

மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணை  விரைவில் அது 100 அடியைத் தாண்டலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.