சிஏஏ வின் ஆபத்துகளைப் புரிந்து கொள்ள அடால்ஃப் ஹிட்லரின் ‘மெய்ன் காம்ப்ஃப்‘ ஐ படியுங்கள்: அமரீந்தர் சிங்

சண்டிகர்: பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங், கடந்த 17ம் தேதியன்று, திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டம் (சிஏஏ) நாட்டின் மதச்சார்பற்ற தன்மைக்கு எதிரானது என்றும் அதை ஹிட்லருடைய, “ஜெர்மனியின் இன மற்றும் மத சுத்திகரிப்பு“டன் ஒப்பிடுவதாகக் கூறினார்.

“1930 ல் ஹிட்லரின் கீழ் ஜெர்மனியில் என்ன நடந்த்தோ அது இப்போது இந்தியாவில் நடக்கிறது. அப்போது ஜெர்மானியர்கள் குரலெழுப்பவில்லை, அதற்காக அவர்கள் வருத்தம் தெரிவித்தனர். ஆனால், நாம் பின்னால் வருத்தப்படக்கூடாது என்பதற்காக இப்போது பேச வேண்டும்“, என பஞ்சாப் சட்டமன்றத்தில் சிஏஏ வை உடனடியாக ரத்து செய்யக் கோரி குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றிய தீர்மானம் மீதான விவாதத்தில், முதலமைச்சர் அமரீந்தர் சிங் கூறினார்.

சிஏஏ வின் கீழ் முஸ்லீம்களையும், யூதர்கள் போன்ற பிற சமூகங்களையும் குடியுரிமையின் வரம்புக்குள் வருவதை தவிர்த்திருப்பதைச் சுட்டிக்காட்டி, “குடியுரிமை வழங்குவதில் மத அடிப்படையிலான எந்தவொரு பாகுபாட்டையும் தவிர்க்கவும், சட்டத்தின் முன் இந்தியாவிலுள்ள எல்லா மத குழுக்களுக்கும் சமத்துவத்தை உறுதி செய்யவும் இச்சட்டத்தை ரத்து செய்வதை இத்தீர்மானம் வேண்டியது.

‘முஸ்லீம்கள் ஏன் விலக்கப்பட்டுள்ளனர்? மத்திய அரசு ஏன் யூதர்களை திருத்தச் சட்டத்தில் சேர்க்கவில்லை? “பஞ்சாபில், ஒரு யூத ஆளுநர் ஜெனரல் ஜேக்கப் இருந்தார். அவர் நாட்டுக்காக 1971 போரில் பங்கேற்றார் என்று சி.எம்.ஓ அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், முதலமைச்சர் அமரீந்தர் சிங், எதிர்க்கட்சிகளை, குறிப்பாக ஷிரோமணி அகாலி தளத்தை, சிஏஏ வின் ஆபத்துகளைப் புரிந்து கொள்ள ஹிட்லரின் “மெய்ன் காம்ப்ஃப்“ஐ படிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அமரீந்தர் சிங் மேலும், அந்த புத்தகத்தை மொழிபெயர்த்து அனைவருக்கும் விநியோகப்பதாகவும் அதனால் அனைவரும் அதைப் படித்து, “ஹிட்லரின் வரலாற்றுத் தவறு“களைப் புரிந்து கொள்வார்கள் என்றும் கூறினார்

இத் தீர்மானத்தை சட்டமன்றத்தில் கேபினட் அமைச்சர் பிரஹ்ம் மோஹிந்திரா அறிமுகப்படுத்தப்படுத்தினார், சபாநாயகர் ராணா கே.பி.சிங் அதை வாக்கெடுப்புக்கு முன் வைத்தார்.