ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள படத்தில் ரஜினிக்கு ஜோடி யார்? பரபரப்பு தகவல்கள்

டிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான சர்க்கார் படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து,  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் அரசியல் படத்தில், ரஜினிகாந்த் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார்.

இந்த படத்துக்கு தேவையாந நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. படத்திற்கான ஒளிப்பதிவு பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ஏற்றுள்ளார்,. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

இந்த நிலையில், படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால், அது உறுதிசெய்யப்படாத நிலையில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவிடம் பேசப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது.

ஆனால் அதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நயன்தாரா ஏற்கனவே பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி பிசியாக நடித்துவருகிறார்.

நயன்தாரா தற்போது விஜய்வுடன் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார். அதே நேரத்தில் சிரஞ்சிவியின் ஷை ரா நரசிம்ம ரெட்டி படத்திலும், சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் படம் உள்பட, வித்தியாசமான இரு வேடங்களில் கலக்கி வரும் ஆயிரா மற்றும் கொலையுதிர் காலம் படங்களிலும் நடித்து வருகிறார்.

இதன் காரணமாக நயன்தாராவிடம் இருந்து சரியான பதில் கிடைக்கவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இதன் காரணமாக ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

நயன்தாராவுக்காக ரஜினி காத்திருப்பாரா அல்லது அவருக்கு ஜோடியாக வேறு கதாநாயகி தேர்வு செய்யப்படுவரா என்பது இன்னும் சில நாட்களில் தெரிய வரும். அடுத்த மாதம் படப்பிடிப்பை தொடங்கி படக்குழு முடிவு செய்துள்ளது.