உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போடியிட தயார்! அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

சென்னை:

மிழகத்தில் நடைபெற உள்ள  உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தனித்துப்போடியிட தயாராக இருப்பதாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார்.

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் உள்ளது. இது தொடர்பான வழக்கில், இந்த ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என உச்சநீதி மன்றத்தில் தமிழகஅரசு உறுதி அளித்தது. அதையடுத்து, உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அரையாண்டு தேர்வு முடிவான, டிசம்பர்  மாத இறுதியில் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தனித்துப்போடியிட தயார் எனவும், அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிட்டால் யாருக்கு பலம் என்பது தெரிந்துவிடும்  என்றவர், ரஜினி-கமல் கூட்டணி என்பது சந்தர்ப்பவாத கூட்டணி, அவர்கள் ஒன்று சேர்ந்தாலும் அவர்களது ரசிகர்கள் ஒன்று சேரமாட்டார்கள் என கூறினார்.