தமிழகத்தில் இடைத்தேர்தலை நடத்த தயார்… சத்தியபிரதா சாஹு

சென்னை:

மிழகத்தில், காலியாக உள்ள  திருவொற்றியூர், குடியாத்தம் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தலை நடத்ததயாராக இருப்பதாக தெரிவித்துள்ள  தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செப்டம்பர் மாதம் 7ந்தேதி க்கு பின்பு இடைத்தேர்தலை நடத்தலாம் என்று கூறி உள்ளார்.

திமுக எம்எல்ஏக்களாக இருந்த கே.பி.பி.சாமி மறைவையடுத்து திருவொற்றியூர் தொகுதி, காத்தவராயன் மறைவையடுத்து குடியாத்தம் தொகுதி,  ஜெ.அன்பழகன் மறையையடுத்து, சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகள் காலியாக உள்ளன.

இந்த தொகுதிகளுக்கு  மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி,  6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தி சட்டமன்ற உறுப்பினர் தேர்வு செய்யப்பட வேண்டியது கட்டாயம்.  அதன்படி, திருவொற்றியூர், குடியாத்தம் தொகுதிகளில் ஆகஸ்டு மாதம்  இறுதிக்குள்ளும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதிக்கு இந்த ஆண்டு இறுதிக்குள்ளும் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

ஆனால், கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, நாடு முழுவதும் அனைத்து பணிகளும் முடங்கி உள்ளதாலும் தேர்தல் தேதிகள் அறிவிப்பதும் தாதமதம் ஏற்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக ஆலோசனை நடத்திய இந்திய தேர்தல் ஆணையம் தமிழகம் உள்பட நாடு முழு வதும் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு  வரும் செப்டம்பர் 7-ம் தேதிக்குள்  இடைத் தேர்தலை நடத்த இயலாது என்றும், அதன்பிறகு, சூழலுக்கு ஏற்ப தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்றும் அறிவித்து.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறியதாவது, நாடு முழுவதும் செப்டம்பர் 7ந்தேதி வரை இடைத்தேர்தல்களை நடத்த வாய்ப்பில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால், தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளுக்கு செப்டம்பர் 7ந்தேதிககு பிறகு எப்போது தேர்தல் தேதி அறிவித்தாலும், தேர்தலை நடத்த தயாராக இருக்கிறோம்.

மேலும்,  திருவொற்றியூர், குடியாத்தம் ஆகிய 2 தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்வது போன்ற பணிகள் தொடங்கி உள்ளது என்றும்,  கொரோனாவால் உயிரிழந்தவர்கள் பட்டியலை மாநகராட்சியே வழங்கலாம். இல்லா விட்டால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், படிவம் 7-ஐ பூர்த்திசெய்து இறந்தவர்கள் பெயரை பட்டியலில் இருந்து நீக்குவதற்காக விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.