சித்தராமையாவை எதிர்த்து போட்டியிட தயார்….எடியூரப்பா அறிவிப்பு

பெங்களூரு:

கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற மே 12-ந்தேதி நடக்கிறது. சாமுண்டீஸ்வரி தொகுதியில் முதல்வர் சித்தராமையா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். 23-ம்தேதி படாமி தொகுதியிலும் வேட்புமனு தாக்கல் செய்கிறார். படாமி தொகுதியில் சித்தராமய்யாவை எதிர்த்து களம் இறங்க தயார் என்று கர்நாடகா பாஜக தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘படாமி தொதியில் நான் போட்டியிட வேண்டுமா? அல்லது வேறு நபர் போட்டியிட வேண்டுமா? என்பதை கட்சியின் தேசிய தலைவர் தான் முடிவு செய்வார். நான் போட்டியிட தயார். படாமி தொகுதியில் பலமான வேட்பாளரை நிறுத்தி, சித்தராமய்யாவை தோற்கடிப்போம். இதற்கான வேலை தொடங்கிவிட்டது. நான் எங்கு போட்டியிட வேண்டும் என்பதை கட்சிதான் முடிவு செய்யும்’’ என்றார்.