கட்சி முடிவெடுத்தால் கன்னியாகுமரி எம்.பி. தொகுதியில் போட்டியிடுவேன்: விஜய் வசந்த் பேட்டி

மார்த்தாண்டம்: கட்சி முடிவெடுத்தால் கன்னியாகுமரி எம்.பி. தொகுதியில் போட்டியிடுவேன் என்று மறைந்த வசந்தகுமார் எம்பியின் மகன் விஜய் வசந்த் கூறி உள்ளார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் காங்கிரஸ் எம்.பியும், வசந்த் அன்ட் கோ உரிமையாளருமான வசந்தகுமார். அவர் சிகிச்சை பலனின்றி அண்மையில் காலமானார். இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்த முதலாவது நாடாளுமன்ற உறுப்பினர்.

இந் நிலையில், கட்சி முடிவெடுத்தால் கன்னியாகுமரி எம்.பி. தொகுதியில் போட்டியிடுவேன் என்று அவரது மகன் விஜய் வசந்த் கூறி உள்ளார். கன்னியாகுமரி அருகே மார்த்தாண்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்து உள்ளதாவது: நான் அரசியலுக்கு வரவேண்டும் என்று எனது தந்தையின் நண்பர்கள் விரும்புகின்றனர். காங்கிரஸ் கட்சியின் முடிவுக்கு கட்டுப்படுவோம். கட்சி முடிவெடுத்தால் கன்னியாகுமரி எம்.பி. தொகுதியில் போட்டியிடுவேன் என்று கூறி உள்ளார்.