‘கஜா புயலை’ எதிர்கொள்ள தயார்! புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி:

மிழகம் மற்றும் புதுச்சேரியை மிரட்ட காத்திருக்கும் ‘கஜா புயலை’ எதிர்கொள்ள புதுச்சேரி தயாராக இருப்பதாக மாநில  முதல்வர் நாராயணசாமி தெரிவித்து உள்ளார்.

வங்கக் கடலில் உருவாகியுள்ள கஜா புயல்,  வரும் 15ம் தேதி இந்த புயல் கரையை கடக்கும். இந்த புயல் கரையை கடக்கும் போது வடதமிழத்கத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, கடலூர், புதுச்சேரி கடுமையாக பாதிக்கப்படும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த புயலின் காரணமாக  அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர சூறாவளி காற்று வீசும், இந்த காற்று மணிக்கு 120 கி.மீட்டர் வேகத்தில் வீசும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில், புயலை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, கஜா புயலை எதிர்கொள்ள துச்சேரி மாநிலம் தயாராக இருப்பதாக அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக புதுச்சேரி வருவாய்த்துறை அமைச்சர் ஷாஜகான், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதைத்தொடர்ந்து  கஜா புயல் தொடர்பாக: புதுச்சேரியில் 1070, 1077 என்ற கட்டணமில்லா எண்களில் புகார் அளிக்கலாம்  என்றும் வருவாய்த்துறை அமைச்சர் ஷாஜகான் கூறி உள்ளார்.