இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் நிறைவில் அந் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல் நீட் குறித்து பேசினார்.

அப்போது அவர், “ஒரு புள்ள செத்துப்போச்சு. பலமுறை நமது இனத்துக்கு துரோகம் இழைக்கப்பட்டபோதும் கைபிசைந்தோம். இனி கைகோர்த்துக்கொள்ள வேண்டும்.

என்னிடம் தீர்வு எதிர்பார்க்காதீர்கள். இருந்தால் சொல்வேன்.

கற்றவர்கள் வாருங்கள். அவர்களோடு கைகோர்ப்போம். அவர்கள் சொல்லட்டும்.

என்னைப் பொறுத்தவரை என் கல்வி முடிந்தபாடில்லை. இதை அனைவரும், முக்கியமாக மாணவர்கள்… பெரிவர்கள் பார்த்துக்கொள்ளட்டும் என்று இருந்துவிடாதீர்கள். பயிற்சியை ஆரம்பியுங்கள்.

படித்துவி்ட்டோம் என்று நினைக்காமல் தீர்வை நோக்கிச் செல்லுங்கள். அடுத்த வருடத்துக்குள் தீர்வு காண வேண்டும்.

நீங்கள் சொல்லுங்கள்.. நான் என்ன செய்ய வேண்டும் என்று.. நான் செய்கிறேன்.

இது பெரிய சுதந்திர போராட்டமா என்றால்.. ஆம்… அதுதான்.

காற்று வாங்க கிடைத்த சுதந்திரத்தையெல்லாம் சுதந்திரம் என்று நாம் நினைத்து பெருமிதம் கொண்டுவிடக்கூடாது.

இதையெல்லாம் கலைப்பதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள்.. முடிந்தால் அவர்களுக்கு புத்தி சொல்வோம். இல்லாவிட்டால் அவர்களை நகர்த்தி வைப்போம்” என்று கமல் தெரிவித்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி என்பது சுவாரஸ்யம் ப்ளஸ் வியாபார நோக்கத்திலான நிகழ்ச்சி. இதில் கமல் பேசியிருப்பது நீட் குறித்த சமுதாய அக்கறையா, அந்த நகழ்ச்சியின் பிரமோஷனா என்று உடனடியாக நெட்டிசன்கள் சிலர் விமர்சிக்க  ஆரம்பித்திருக்கிறார்கள்.