ரஃபேல் ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு தயாரா? மோடிக்கு காங்கிரஸ் சவால்

டில்லி:

ஃபேல் ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் உச்சநீதி மன்றம் மோடி அரசுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய நிலையில், பாஜக அதை கொண்டாடி வருகிறது.

இந்த நிலையில், ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அமைத்து விசாரணை நடத்த தயாரா என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் சவால் விடுத்துள்ளது.

ரஃபேர் ஒப்பந்தம் முறைகேடு தொடர்பாக நேற்று உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், செய்தியாளர்களை சந்தித்த  காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜிவாலா, மோடி அரசுக்கு சவால் விடுத்தார்.

ரஃபேல் போர் விமானத்தின் விலை, ஒப்பந்த நடைமுறை, இதர அம்சங்கள் குறித்த விவகாரங் களில் உச்சநீதிமன்றம் முடிவெடுக்க முடியாது என்றவர்,  நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்துவதன்  மூலமே உண்மைகள் வெளிவரும் என்று கூறினார்.

உச்சநீதி மனற்ம்,  ரஃபேல் விமானத்தின் விலை விவரங்களை ஒப்பிட்டு பார்ப்பது தங்களது பணியல்ல என்று கூறியிருப்பதை சுட்டிக்காட்டிய சுர்ஜித்வாலா,  ரஃபேல் போர் விமானத்தின் விலை நிர்ணய நடைமுறை, பிரான்ஸ் அரசின் உத்தரவாதம் போன்றவைகள் குறித்து, நாடாளுமன்ற கூட்டுக் குழுவே விசாரிக்க முடியும் என்பதையும் தெளிவுபடுத்தினார்.

ரஃபேர் விவகாரத்தில்  மறைப்பதற்கு ஒன்றுமில்லை என்றால், மோடி அரசு நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு மத்திய அரசு தயங்குவது ஏன்? என்று கேள்வி எழுப்பியவர்,  உச்சநீதிமன்றத் தில் மத்திய அரசு அரைகுறையான தகவல்களையே தெரிவித்துள்ளது; அந்த தகவல்களும் ஆய்வு செய்யப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

மேலும், நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அமைத்து ரஃபேல் விமான ஒப்பந்தம் குறித்து விசாரிக்க  தயாரா என்றும் மோடிக்கு சவால் விடுத்தார்.