ரெயில் கழிப்பிடங்கள் விமான கழிப்பிடம் போல் மாற்றப்படும்….பியூஷ் கோயல்

டில்லி:

விமானத்தில் இருப்பது போல் ரெயில்களில் உள்ள கழிப்பிடங்கள் வாக்கம் பயோ கழிப்பிடங்களாக மாற்றி அமைக்கப்படும என்று பியூஷ் கோயல் தெரிவித்தார்.

இது குறித்து ரெயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் இன்று நிருபர்களிடம் கூறுகையில்,‘‘நாடு முழுவதும் ஓடும் ரெயில்களில் கடந்த மாதம் வரை 37 ஆயிரத்து 411 பெட்டிகளில் ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 965 பயோ கழிப்பிடம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பயோ கழிப்பிடம் அமைக்க ஒரு லட்சம் ரூபாய் செலவாகிறது.

விமானங்களில் உள்ளது போல் வாக்கம் பயோ கழிப்பிடங்கள் அமைக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக 500 வாக்கம் பயோ கழிப்பிடங்கள் பரிசோதனை முறையில் அமைக்கப்படுகிறது. இதைதொடர்ந்து 2.5 லட்சம் பயோ கழிப்பிடங்கள் மாற்றியமைக்கப்படும்’’ என்றார்.