பி.எச்.பாண்டியனுடன் நேருக்கு நேர் விவாதிக்கத் தயார்! செங்கோட்டையன் சவால்

சென்னை,

ஜெயலலிதா மரணம் குறித்தும், தற்போது அதிமுவில் நடைபெற்று வரும் நிகழ்வுகள் குறித்து இன்று காலை  தமிழக முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் மற்றும் அவரது மகன் மனோஜ் பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அதற்கு பதிலடியாக அதிமுக மூத்த உறுப்பினர்கள் பண்ருட்டி ராமச்சந்திரன் மற்றும் செங்கோட்டையன் அதிமுக தலைமை அலுவலகத்தில் பேட்டி அளித்தனர்.

அப்போது பேசிய செங்கோட்டையன், ஜெயலலிதாவிடம் இருந்து பல நலன்களைப்பெற்ற P.H பாண்டியன் இன்று துரோகிகளுடன் சேர்ந்து செயல்படுகிறார் என்றும், அதிமுகவினர் ஒற்றுமையாகவும், அமைதியாகவும், கட்டுப்பாட்டுடனும் உள்ளதை எல்லோரும் நன்கு அறிவார்கள்.

இந்த சூழலில் வேண்டுமென்றே திட்டமிட்டு தவறான தகவல்களை பரப்பி மக்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்த முயல்கிறார்கள் பி.ஹெச்.பாண்டியனும், அவரது மகன் மனோஜ் பாண்டியனும்.

பி.எச்.பாண்டியன் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது என்றும், இதுகுறித்து என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயாராக இருப்பதாகவும் என்றும் செங்கோட்டையன் சவால் விடுத்தார்.

அவர்களுக்கு பிரச்சினை இருந்தால் கட்சிக்குள்தான் பேசியிருக்க வேண்டும் என்றார் பண்ருட்டி ராமச்சந்திரன்.