அதிமுகவில் மீண்டும் இணையத்தான் செந்தில்பாலாஜி முயற்சித்தார்!:  அமைச்சர் தங்கமணி

திமுகவில் சேர   செந்தில்பாலாஜி  முயற்சித்தார் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

அ.ம.மு.க.வில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் கரூர் செந்தில் பாலாஜி இன்று தி.மு.க. தலைவர் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

இந்த நிலையில் அ.தி.மு.க. முக்கிய பிரமுகர்களில் ஒருவரும் அமைச்சருமான தங்கமணி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற தாலிக்குத் தங்கம் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பிறகு செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் தெரிவித்ததாவது:

தனது ஆதரவாளர்களுடன் செந்தில் பாலாஜி – அமைச்சர் தங்கமணி

“செந்தில்பாலாஜி முதலில் அ.தி.மு.க.வில் இணையத்தான் விரும்பினார். அதற்காக பலமுறை தூதுவிட்டார். ஆனால் அவரை கட்சியில் சேர்த்தால் குழப்பம் ஏற்படும் என்பதால் நாங்கள் மறுத்துவிட்டோம்.

பிறகு வேறு வழி இன்றி திமுகவில் இணைந்துள்ளார். அங்கே அவர் உறுப்பினராக மட்டுமே இருக்க முடியும். வேறு எந்த பொறுப்பும் அளிக்கமாட்டார்கள்” என்ற அமைச்சர் தங்கமணி, “செந்தில்பாலாஜி பல கட்சிகளுக்குத் தாவும் பச்சோந்தி” என்று காட்டமாக விமர்சித்தார்.