புது டெல்லி:

ன்மையான அனமிகா வேலையில்லாதவர், உத்தர பிரதேச அரசு அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று  காங்கிரஸ் பொதுச் செயலாளர்  பிரியங்கா வலியுறுத்தியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த அனாமிகா சுக்லா என்ற பெண் மாநில அரசின் கஸ்தூரிபா காந்தி பலிகா வித்யாலயா பள்ளிகளின் 25 கிளைகளில் பணியாற்றி வருவதாக டைம்ஸ் ஆப் இந்தியா இரு தினங்களுக்கு முன்பு செய்தி வெளியிட்டது. இதன்மூலம் கடந்த 13 மாதங்களாக ஒரு கோடி ரூபாய்க்கும் மேலாக சம்பளமாக பெற்று வந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில் கஸ்கஞ்ச் மாவட்டத்தில் அனாமிகா சுக்லாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆனால் அவரது உண்மையான பெயர் அனாமிகா இல்லை. ஃபருகாபாத்தை சேர்ந்த பிரியா என்று தெரியவந்துள்ளது. இதன்மூலம் அனாமிகா சுக்லாவின் தனிப்பட்ட தகவல்களை பல்வேறு நபர்கள் முறைகேடு பயன்படுத்தி இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இதற்கு பின்னணியில் ஒரு பெரிய கும்பலே செயல்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர்  பிரியங்கா  பேசுகையில்,  உன்மையான அனமிகா வேலையில்லாதவர். அவர் இன்னும் வறுமையில் வாடி வருகிறார். தனது பெயரில் இதுபோன்ற ஒரு விஷயம் நடந்ததே அவருக்கு தெரிய வில்லை என்றும், அவர் மீது வீண் பழி சுமத்தி கைது செய்துள்ளதற்காக  உத்தர பிரதேச அரசு அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று  வலியுறுத்தியுள்ளார்.

அனாமிகாவின் வேலை விஷயத்தில் நீதி கிடைப்பதுடன், அவருக்கு தேவையான பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் பிரியங்க காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிகப்பத்டுள்ளது.

அனாமிகா சுக்லா அதிகாரிகளை சந்தித்து, தனது விண்ணப்பம் செய்த வேலை தொடர்பாக கேள்வி எழுப்பியதை அடுத்து இந்த ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை அனமிகா சுக்லா காவல் துறையினரால் கைது செயப்பட்டார். அவர்  ஒரே 25 பள்ளிகளில் சில மாதங்கள் வேலை பார்த்தாகவும், கடந்த பிப்ரவரி மாதம் வரை   ஒரு கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மைன்பூரி நகரைச் சேர்ந்த இவர், கஸ்கஞ்சில் உள்ள ஃபரித்பூரில் உள்ள கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயாவிலும், ஒரே நேரத்தில் அம்பேத்கர் நகர், பாக்பத், அலிகார், சஹரன்பூர் மற்றும் பிரயாகராஜ் மாவட்டங்களில் பல பள்ளிகளிலும் முழுநேர அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வந்ததாக குற்றத்தில் கைது செய்யப்பட்டார்.

ஆசிரியர்களின் தனிப்பட்ட பதிவுகள், சேரும் தேதி மற்றும் பதவி உயர்வு போன்ற விவரங்கள் தேவைப்படும் மனவ் சம்படா போர்ட்டலில் ஆசிரியர்களின் தரவுத்தளம் உருவாக்கப்படும்போது இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.

பதிவுகள் பதிவேற்றப்பட்டதும், அனாமிகா சுக்லாவின் தனிப்பட்ட விவரங்கள் மாநிலம் முழுவதும் உள்ள 25 பள்ளிகளில் பட்டியலிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.