சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘சூரரைப் போற்று’ திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு பெற்றுள்ளது .

சமூக வலைதளங்களில் நெடுமாறனுக்கு சரிசமமாக பொம்மிக்கும் ரசிகர்கள் இருக்கின்றனர்.

இந்நிலையில் கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத் தன் மனைவியின் பேக்கரி பெயர் மற்றும் புகைப்படத்தை தற்போது தனது டிவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார். காரணம் அந்த பேக்கரியை ஆரம்பித்து 25 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், இந்த பதிவை அவர் வெளியிட்டுள்ளார். ‘பன் வேர்ல்ட் ஐயங்கார் பேக்கரி’ என்ற பெயரில் தான் அவர் பேக்கரி நடத்தி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.