‘லா லிகா’ கோப்பை – முதலிடத்தில் தொடரும் ரியல் மேட்ரிட் அணி!

--

மேட்ரிட்: ஸ்‍பெயின் நாட்டில் தற்போது நடைபெற்றுவரும் ‘லா லிகா’ கால்பந்து போட்டியில், 74 புள்ளிகளைப் பெற்றுள்ள ரியல் ‍மேட்ரிட் அணி, முதலிடத்தை தக்கவைத்துள்ளது.

இதன்மூலம், அந்த அணியின் கோப்பை வெல்லும் வாய்ப்பும் பிரகாசமாக உள்ளது.

லீக் போட்டியொன்றில், கெடாபே – ரியல் மேட்ரிட் அணிகள் மோதின. இப்போட்டியில் 1-0 என்ற கோல்கணக்கில் ரியல் மேட்ரிட் அணி வ‍ென்றது.

இந்த வெற்றியின்மூலம், தான் இதுவரை விளையாடிய மொத்தம் 33 போட்டிகளில், 22 வெற்றிகள், 8 டிரா மற்றும் 3 தோல்வியுடன், மொத்தம் 74 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது அந்த அணி.

இந்த அணிக்கு கடும் போட்டியை கொடுக்கும் அணியாக உள்ளது மெஸ்ஸி இடம்பெற்றுள்ள பார்சிலோனா அணி. போட்டியின் இறுதியில் இரு அணிகளும் சம புள்ளிகள் பெற்றால், டை பிரேக்கர் முறையில், ரியல் மேட்ரிட் அணிக்கே கோப்பை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.