மேட்ரிட்: ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற ‘லா லிகா’ கால்பந்து கோப்பை தொடரில், சாம்பியன் பட்டத்தை வென்றது ரியல் மேட்ரிட் அணி.
உள்ளூர் கிளப் அணிகளுக்கான ‘லா லிகா’ கால்பந்து தொடரில், சாம்பியன் பட்டத்தை வெல்வது நடப்பு சாம்பியன் பார்சிலோனாவா அல்லது ரியல் மேட்ரிட் அணியா? என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
மொத்தமாக விளையாடிய போட்டிகளின் அடிப்படையில், எந்த அணி அதிகப் புள்ளிகளைப் பெறுகிறதோ? அந்த அணியே சாம்பியன்!
அதனடிப்படையில், மொத்தம் 37 போட்டிகளில் விளையாடி, 86 புள்ளிகளைப் பெற்ற ரியல் மேட்ரிட் அணி, 34வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
ஆனால், நடப்புச் சாம்பியன் பார்சிலோனா அணி, 37 போட்டிகளில் விளையாடி, மொத்தம் 79 புள்ளிகளை மட்டுமே பெற்று இரண்டாமிடம் பெற்றது. இதன்மூலம் ஹாட்ரிக் கோப்பை வெல்லும் அந்த அணியின் ஆசை நிராசையானது.