ஸ்பெயின் கால்பந்து தொடர் – மீண்டும் முதலிடத்தில் ரியல் மேட்ரிட் அணி!

பார்சிலோன்: ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வரும் ‘லா லிகா’ உள்ளூர் கிளப் அணிகளுக்கான கால்பந்து தொடரில், மீண்டும் முதலிடத்தைப் பெற்றது ரியல் மேட்ரிட் அணி.

தன்னுடன் மோதிய மல்லோர்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதன் மூலம் அந்த அணிக்கு மீண்டும் முதலிடம் கிடைத்தது.

போட்டியின்போது, 19வது நிமிடம் மற்றும் 56வது நிமிடங்களில் ரியல் மேட்ரிட் அணியினிர் கோல் அடித்தனர்.

இத்தொடரில், ரியல் மேட்ரிட் அணி, இதுவரை தான் ஆடியுள்ள 31 போட்டிகளில், 20 வெற்றி, 8 தோல்வி மற்றும் 3 டிரா என்ற கணக்கில் 68 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. மற்றொரு அணியான பார்சிலோனா, இரண்டாமிடத்திற்கு தள்ளப்பட்டது.