பாக். அணு ஆயுத விஷயத்தில் தீவிரவாதிகளல்ல, ராணுவமே ஆபத்தானது: மேனன்

பாகிஸ்தான் அணு ஆயுதங்கள் தீவிரவாதிகளின் கையில் சிக்கினால் ஆபத்து என்று உலகநாடுகளின் தலைவர்கள் பேசிவரும் சூழலில், தீவிரவாதிகளால் பாகிஸ்தானின் அணு ஆயுதக்களுக்கு ஆபத்து ஏற்ப்பட வாய்பில்லை, ஆனால் அந்நாட்டு ராணுவமே அணு ஆயுதங்களை தவறாக பயன்படுத்தக் கூடும் என்ற பகீர் தகவலை இந்தியாவின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன் வெளியிட்டுள்ளார்.

pak_army

மேனன் தான் எழுதிய “இன்சைட் த மேக்கிங் ஆஃப் இந்தியாஸ் ஃபாரின் பாலிஸி” என்ற நூலில், பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு அணு அயுதங்களை பயன்படுத்தத் தெரியாது. அவர்களில் பலர் படிப்பறிவற்றவர்கள். அணு ஆயுதங்கள் மிக சிக்கலான தொழில்நுட்ப அமைப்பைக் கொண்டவை. அவற்றை கையாளுவது சுலபமல்ல. எனவே பாகிஸ்தானின் அணு ஆயுதங்களுக்கு தீவிரவாதிகளால் பாதிப்பு ஏற்ப்பட வாய்ப்பே இல்லை.

ஆனால் பாகிஸ்தான் ரானுவத்தின் உயரதிகாரிகள் சிலராலேயே நியூக்ளியார் ஜிகாத் என்ற பெயரில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட வாய்ப்புகள் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் இந்தியாவின் அணு ஆயுதங்கள் பாதுகாப்பாக உள்ளன. இந்தியா மிகவும் பொறுப்புள்ள நாடு என்று அவர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.