அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் ஏற்பட்டுவரும் அதிகளவிலான கொரோனா இறப்பிற்கு, கொரோனா வைரஸின் L-வகை திரிபு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த L-வகை திரிபு, கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட சீனாவின் வூஹானில், இந்த வகை திரிபு, பரவலாக கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த L வகை வைரஸ், S வகை வைரஸைக் காட்டிலும் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடியது என்று கூறப்படுகிறது. இந்த L வகை திரிபு வைரஸ்தான், குஜராத்தில் நிகழ்ந்துள்ள அதிக இறப்புடன் தொடர்புபடுத்தப்படுகிறது. அம்மாநிலத்தில் இதுவரை மொத்தம் 133 கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

ஆனால், இந்தக் கருத்தை உறுதிசெய்யும் வகையில், இதுவரை எந்த ஆராய்ச்சியும் மேற்கொள்ளப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேசமயம், விஞ்ஞானிகளின் பகுப்பாய்வின்படி, எங்கெல்லாம் கொரோனாவினால் அதிக மரணங்கள் நிகழ்ந்துள்ளதோ, அங்கெல்லாம் இந்த L வகை திரிபுதான் அதிகம் கண்டறியப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.