இதற்காகத்தான் “ரெட் அலர்ட்” கொடுக்கப்பட்டதா?: இப்படியும் ஒரு யூகம்!

திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தலை ஒத்திவைக்கத்தான் வானிலை ஆய்வு மையம் மூலம் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டதா என்று அரசியல் நோக்கர்கள் மட்டத்தில் ஒரு யூகம் கிளம்பியிருக்கிறது.

அ.தி.மு.க., எம்.எல்.ஏ., டி.கே.போஸ் மறைவால் திருப்பரங்குன்றம்,  தி.மு.க., முன்னாள் தலைவர் கருணாநிதி மறைவால் திருவாரூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளன.

நாட்டில் ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அப்போது திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் அறிவிக்கப்படவில்லை.  “தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தலைமைச் செயலாளற் கூறியதால், தேர்தலை அறிவிக்கவில்லை” என்று தேர்ல் ஆணையம் காரணம் கூறியது.

ஆனால் அரசியல் நோக்கர்கள் மத்தியில் வேறுவித யூகம் உலவுகிறது. அதாவது, “ திருப்பரங்குன்றத்தில் டிடிவி தினகரனுக்கும், திருவாரூரில் திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக தமிழக அரசுக்கு உளவுத்துறை தெரிவித்துள்ளது. ஆக இரண்டு தொகுதிகளிலுமே ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு இல்லை. இதனால் இடைத்தேர்தலை ஒத்திவைக்க ரெட் அலர்ட் என்று கூறப்பட்டிருக்கலாம்” என்பதுதான் அந்த யூகம்.

அதே நேரம், “அரசியல்காரணங்களுக்காக எல்லாம் வானிலை மையத்தை பயன்படுத்த முடியும் என்பது நம்புவதற்கு உகந்ததாக இல்லை” என்ற பேச்சும் இருக்கிறது.

 

 

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: reason-behind-red-alert-in-tamilnadu-must-be-to-postpone-the-by-election-says-political-experts/, இதற்காகத்தான் “ரெட் அலர்ட்” கொடுக்கப்பட்டதா?: இப்படியும் ஒரு யூகம்!
-=-