டில்லி

ந்தியாவை விட்டு பல செல்வந்தர்கள் வெளியேறி வருவது குறித்து அரசின் நேரடி வரி விதிப்பு வாரியம் கவலை தெரிவித்துள்ளது.

சமீப காலமாக இந்தியாவில் உள்ள செல்வந்தர்களில் பலர் நாட்டை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் குடியேறி விடுகின்றனர்.   கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 23000 செல்வந்தர்கள் தங்கள் இந்தியக் குடியுரிமையை விட்டு விட்டு வேறு நாட்டின் குடியுரிமையைப் பெற்றுள்ளனர்.   அந்த எண்ணிக்கையில் அதிக பட்சமாக கடந்த 2017 ஆம் ஆண்டில் மட்டும் 7000 செல்வந்தர்கள் நாட்டை விட்டு சென்றுள்ளனர்.

இது குறித்து மத்திய நேரடி வரி விதிப்பு வாரியம், “சமீபகாலமாக நாட்டை விட்டு பலர் வேறு நாடுகளுக்கு குடி பெயர்வது வழக்கமாகி வருகிறது.    அவர்களில் பலர் செல்வந்தர்கள் என்பதால் அவர்களிடம் இருந்து கிடைக்கும் வரி வசூல் நாட்டுக்கு இழப்பாகிறது.   அவர்கள் தங்களை வெளிநாட்டவர் என கருதி வரி செலுத்துவதை நிறுத்தி விடுகின்றனர்.    ஆனால் அவர்களுடைய தொழில் மற்றும் நிதி ஆதாரங்கல் இந்தியாவில் உள்ளது என்பதை மறந்து விடுகின்றனர்.” என தெரிவித்துள்ளது.

இது குறித்து முன்னாள் மும்பை வாசியான ஹீரநந்தானி, “வரி விதிப்புக்காக வேறு நாடுகளுக்கு செல்வது குறைவான நபர்களே.  பெரும்பாலானோர் இந்திய பாஸ்போர்ட்டுகளுக்கு அயல்நாட்டு வேலை வாய்ப்பு விசா கிடைப்பதில்லை என்பதால் வேறு நாட்டு குடியுரிமை பெறுகின்றனர்.   எனது மகன் ஹரிஷ் என்பவர் இன்னும் இந்தியக் குடியுரிமையுடன் உள்ளார்.   அவர் எனது நிறுவனத்தை நிர்வகிக்கிறார்.” என தெரிவித்துள்ளார்.

அவர் கூறியது போல இந்தியாவை விட்டு வெளியேறிய பல செல்வந்தர்களும் தங்களின் இந்திய வர்த்தகத்தை நிறுத்தாமல் உள்ளனர்.  சமீபத்திய உலக வங்கியின் கணக்குப்படி உலகின் சுலபமான வர்த்தக நாடுகளில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது.