கமல், ரஜினி அரசியல்..!: மது ஒழிப்பு போராளி நந்தினி  சொல்லும் “பகீர்” காரணம்

ரஜினி, கமல்

து ஒழிப்பு போராளியான சட்ட மாணவி நந்தினி ஆனந்தன் மதுவிலக்கு போராட்டங்கள் நடத்தியதால் பலமுறை சிறைப்படுத்தப்பட்டவர். தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருபவர். ரஜினி கமல் அரசியல் பின்னணி குறித்து இவரது  முகநூல் பதிவைப் படித்துப்பாருங்கள்:

அந்த பதிவு:

“சினிமா துறையிலிருந்து வந்த கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா,விஜயகாந்த் ஆகியோரை வைத்து 50 ஆண்டுகால தமிழக அரசியலை இந்திய ஆளும் வர்க்கம் தம் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.சினிமா கவர்ச்சியாலும், போதையாலும் அடிமைகளாக்கப்பட்ட தமிழக மக்கள் தற்போது படிப்படியாக விழிப்புணர்வு பெற்று தங்களுக்கான உண்மையான அரசியலை தேட தொடங்கியிருக்கிறார்கள்.

இந்தத் தேடலின் வெளிப்பாடு தான் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் தன்னெழுச்சி போராட்டங்கள். இந்தியாவிலேயே அதிகமான போராட்டங்கள் நடக்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.தமிழக இளைஞர்களிடம் ஏற்பட்டுவரும் எழுச்சி இந்தியா முழுவதும் பரவிவிடுமோ என்கிற அச்சம் ஆளும் வர்கத்துக்கு உள்ளது.

நந்தினி

இனி எந்த முகத்தைக் காட்டி தமிழக மக்களை குறிப்பாக இளைஞர்களை ஏமாற்றுவது என்ற தேடலில் கமல்,ரஜினி போன்ற பிரபலமான நடிகர்களை ஆளும்வர்க்கம் களத்தில் இறக்கி விட்டுள்ளது.உண்மையான மக்கள் போராட்டங்களை மூடி மறைக்கும் ஊடகங்கள் டிவிட்டரில் போலி யுத்தம் நடத்தும் சினிமா நடிகரை ஊதிப் பெரிதாக்க கடுமையாக முயற்சிக்கின்றன.

இன்றைய ஆளும் கட்சிக்கு எதிரான மக்களின் கோப உணர்வை சினிமா நடிகர்களுக்கு ஆதரவாக திசைதிருப்பிவிட நடக்கும் சூழ்ச்சி அரசியலை புரிந்துகொள்வோம்.மக்களுக்கான உண்மையான அரசியலை முன்னெடுப்போம்” – இவ்வாறு நந்தினி பதிவிட்டுள்ளார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: reason for kamal rajini politics says liquor protester nandhini, கமல், ரஜினி அரசியல்..!: மது ஒழிப்பு போராளி நந்தினி  சொல்லும் "பகீர்" காரணம்
-=-