புதுச்சேரி

ஸ்ரீ லட்சுமி ஜுவல்லரி கடைகளில் 3 நாட்களாக 50 அதிகாரிகள் சோதனை நடத்தப்படுவதின் பின்னணி பற்றி சில செய்திகள் வந்துள்ளன

புதுச்சேரி அம்பலத்தடையார் மடத்து வீதியில் அமைந்துள்ளது ஸ்ரீ லட்சுமி ஜுவல்லரி என்னும் நகைக்கடை.   இந்தக் கடையில் தங்கத்துக்கு தனியாகவும் வெள்ளிக்கு தனியாகவும் கடைகள் உள்ளன.   அத்துடன் அங்கேயே வெளிநாட்டுப் பண பரிமாற்ற நிறுவனம் (மணி எக்ஸ்சேஞ்ச்) ஒன்றும் இதே நிர்வக்கத்தால் தனிய நடத்தப்பட்டு வருகிறது.    சென்ற மாதம் 16ஆம் தேதி காலை 7 மணிக்கு வருமான வரி அதிகாரிகள் இந்தக் கடைகள் மற்றும் அலுவலகத்தில் சோதனையை நடத்தினர்.

நேற்று முன் தினம் முதல் இரண்டாம் கட்ட சோதனைகள் தொடரப்பட்டது.   இந்தக் கடைகள் மட்டுமின்றி இதே நிர்வாகத்தால் நடத்தப்படும் ஆரோவில் அருகே உள்ள ஓசன் ஸ்பிரே ஹோட்டல், மற்றும் நகைக்கடை மேலாளர் தென்னரசுவின் இல்லாம் ஆகிய இடந்தளில் சோதனை நடந்தது.    இந்த சோதனை நேற்றும் இன்றும் தொடர்ந்து வருகிறது.   இது வரை சுமார் 50 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.  சோதனையில் பல முக்கிய அவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

இதற்குப் பின் கடை உரிமையாளரையும் முக்கியமான அலுவலர்களையும் வருமான வரித்துறை அதிகாரிகள் கடுமையாக விசாரித்து வருகின்றனர்   ஒரே இடத்தில் இத்தனை நாட்கள் இத்தனை அதிகாரிகள் சோதனை நடத்துவது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.   இத்துடன் இதற்கான காரணமாக சில செய்திகள் அதிகாரபூர்வமற்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

”மத்திய அரசால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரூ.500 மற்றும் ஆயிரம் செல்லாது என அறிவிப்பு வந்ததை தொடர்ந்து சசிகலாவின் தரப்பில் இருண்டு இந்த நகைக்கடைகள் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுக்கள் மாற்றப்பட்டுள்ளது.   மிகவும் குறைந்த அளவு வர்த்தகமே அதுவரையில் இருந்த நிலையில் திடீரென கோடிக்கணக்கான பணம் வங்கிக் கணக்கில் புழங்கியாதால் இந்த சோதனைகள் நிகழ்ந்துள்ளன.   அது மட்டுமின்றி தமிழகத்தில் மட்டும் அல்லாமல் புதுச்சேரியிலும் தற்போது சசிகலாவின் உறவினர்களின் இடங்களில் சோதனை நடக்கிறது.   இதே நேரத்தில் ஸ்ரீலட்சுமி ஜூவல்லரியில் சோதனை நிகழ்வதற்கு நிச்சயமாக சசிகலா மற்றும் அவருடைய குடும்பத்தினர் தொடர்பு மட்டுமே காரணமாக இருக்கும்” என அந்தச் செய்திகள் கூறுகின்றன.