பழைய ஆப்பிள் ஐ ஃபோன்கள் மெதுவாக இயங்கும் காரணம் என்ன தெரியுமா?

வாஷிங்டன்

ழைய ஆப்பிள் ஐ ஃபோன்கள் மெதுவாக இயங்கும் காரணங்கள் பற்றிய விவரங்கள் இதோ

ஐ ஃபோன் வைத்திருப்பவர்களில் பலர் தங்களின் ஃபோன் பழையதாகும் போது வேகமும் குறைந்து விடுவதாக தெரிவிப்பது வழக்கம்.    இதற்காக ஓ எஸ் அப்டேட் போன்றவைகளை செய்த பிறகும் வேகத்தில் முன்னேற்றம் இருப்பதில்லை.   அதுவும் குறிப்பாக ஐ ஃபோன் 6 எஸ்,  6 எஸ் ப்ளஸ் போன்ற மாடல்களைப் பற்றி இது போன்ற புகார்கள் அதிகம் வருகின்றன.

இதற்கு ஆப்பிள் நிறுவனம் பதில் அளித்துள்ளது.   அந்த பதிலில், “இது எங்கள் நிறுவனத்தால் வேண்டும் என்றே செய்யப்பட்டுள்ள ஒரு  ஏற்பாடு ஆகும்    ஃபோன்கள் பழையதாகும் போது பேட்டரிகளும் பழையதாகி விடுகிறது.   அதனால் பேட்டரிகள் சீக்கிரம் சார்ஜ் தீர்ந்து விடும் வாய்ப்புக்கள் உள்ளது   எனவே பேட்டரியின் சார்ஜ் அதிக நேரம் நிற்க வேண்டும் என்பதற்காக இது போல் அமைக்கப்பட்டுள்ளது.   இதனால் ஃபோன்கள் மெதுவாக இயங்கும்.    எனவே பேட்டரியில் வெகு நேரம் சார்ஜ் நீடித்திருக்கும்.

இது போல வசதி இனி வெளி வரும் அனைத்து ஐ ஃபோன்களிலும் உருவாக்க உள்ளது.    பொதுவாக ஸ்மார்ட் ஃபோன்களில் பேட்டரி பழையதானால் அதில் சீக்கிரம் சார்ஜ் தீர்ந்து விடும்.   ஆனால் பிராசசர்களின் வேகம் குறையாது.   எனவே அதனால் பேட்டரி சார்ஜ் விரையில் தீர்ந்து விடுகின்றன.   அதனால் வேகம் குறைந்ததற்கு பயப்பட வேண்டாம்.    வேகம் தேவை எனில் பேட்டரிகளை மாற்றிக் கொள்ளலாம்” என தெரிவித்துள்ளது.