ஹரிஷ் கல்யாண் நடிக்கவிருக்கும் ‘தனுசு ராசி நேயர்களே’ திரைப்படத்தில் ‘தளபதி 63’ படத்தில் நடித்து வரும் ரெபா மோனிகா ஒப்பந்தமாகியுள்ளார்.

இயக்குநர் சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கவிருக்கும் படம் ‘தனுசு ராசி நேயர்களே’ .இந்நிலையில், இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ரியா சக்ரபோட்டி நடிப்பதாக அறிவிப்பு வெளியான நிலையில், தற்போது நடிகை ரெபா மோனிகாவும் நடிக்கவிருப்பது உறுதியாகியுள்ளது.

ஸ்ரீ கோகுலம் மூவீஸ் பேனரின் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.