அடையாறு புரோக்கன் பிரிட்ஜ் மீண்டும் கட்ட முடியுமா? சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை:

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், சுற்றுலாவை மேம்படுத்தும் வகையிலும்  அடையாறு புரோக்கன் பிரிட்ஜ் மீண்டும் கட்ட முடியுமா?  அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என சென்னை மாநகராட்சி சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி விடுத்துள்ளது.

சென்னையில் முக்கிய அடையாளங்களில் ஒன்று அடையாறு பகுதியில் பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் உள்ள புரோக்கன் பிரிட்ஜ் எனப்படும் பழைய உடைந்த பாலம். தற்போது காதலர்களின் மறைவிடமாக இருந்து வருகிறது. பலருக்கு தெரியாத இந்த  உடைந்தபாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தமிழகஅரசு ஆராய சென்னை உயர்நிதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

சென்னை சாந்தோம் கடற்கரைக்கும், பெசன்ட் நகர் கடற்கரைக்கும் இடையே அடையாறு கடலில்  கலக்கும் முகத்துவாரம் உள்ளது. இந்தப் பகுதியை மக்கள் கடக்க வேண்டும் என்பதற்காக 1967ஆம் ஆண்டு ஒரு பாலம் கட்டப்பட்டது. 10 ஆண்டுகள் மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்த இந்தப் பாலத்தின் ஒரு பகுதி   கடல் அரிப்பால் உடைந்து விழுந்தது. பாலத்தை மீண்டும் சீரமைக்கவோ அல்லது கட்டப்படவோ இல்லை. தற்போது இந்த பாலம் சினிமா சூட்டிங் எடுக்கவும் காதலர்கள் பொழுதுபோக்கவும் உபயோகமாகி வருகிறது..

இந்தப் பாலத்தை தற்போது மீண்டும் கட்டினால் கண்டிப்பாகச் சென்னையின் பிரபல சுற்றுலாத்தளங்களில் ஒன்றாக மாறும் எனப்படுவதுடன், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வாய்ப்பு உள்ளதாக பலரும் தெரிவிக்கின்றனர். இந்த பாலம் அமைக்கப்பட்டு வாகன பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டால், சென்னை பட்டினப்பாக்கம் எம்ஆர்சி நகரில் இருந்து நேரடியாக சென்னை பெசன்ட் நகர் பகுதிக்கு வர முடியும்…

இந்நிலையில் அதற்குச் சாத்தியம் உள்ளதா ? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.  அதன் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து மூன்று வாரங்களில் அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.