பணம் வாங்கிக்கொண்டு பாஜகவுக்கு வாக்களியுங்கள்! மத்தியஅமைச்சர் சர்ச்சை பேச்சு

பனாஜி,

ட்சிகளிடம் பணம் வாங்கிக்கொள்ளுங்கள். ஆனால் பாஜகவுக்கு வாக்களியுங்கள் என்று மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர் பேசினார்.

கோவா சட்டசபை தேர்தலையொட்டி நடைபெற்ற பா.ஜ. தேர்தல் கூட்டத்தில் பேசிய மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர்,  மற்ற கட்சிகள் பணம் கொடுத்தால் அதை வாங்கிக் கொண்டு பா.ஜ.க.வுக்கு வாக்களிக்குமாறு பேசினார்.

மத்திய அமைச்சர் ஒருவரே பணம் வாங்கிக்கொண்டு வாக்களியுங்கள் என்று பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கோவா மாநில சட்டசபைக்கு வரும் பிப்ரவரி 4-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது ஆளும்கட்சியாக உள்ள பா.ஜ.க. ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள கடும் முயற்சி எடுத்து வருகிறது.

இந்நிலையில் கோவா மாநிலம் சிம்பெல் நகரில் பேசிய மனோகர் பாரிக்கர்,

கட்சிகள் நடத்தும் ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்காக பணம் பெறுவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று கூறினார்.

ஆனால் வாக்களிப்பதற்கு பணம் பெற்றால், அதை வாங்கிக் கொண்டு தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கூறினார்,

இதனால் பாரிக்கர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல், ஆம்ஆத்மி கட்சிக்காக கோவாவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட டில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், பணம் வாங்கிக் கொண்டு ஆம் ஆத்மிக்கு வாக்களிக்குமாறு கூறினார்.

இதுகுறித்து அவர் மீது வழக்குப்பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.