மும்பை இந்தியன் அணியிடம் பணம் பெறவில்லை: குற்றச்சாட்டுக்கு சச்சின் டெண்டுல்கர் மறுப்பு

மும்பை:

மும்பை இந்தியன் அணியிடமிருந்து பணமோ அல்லது அந்த அணிக்காக நான் முடிவு எடுக்கவோ இல்லை என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.


ஐபிஎல் போட்டியில் பங்குபெற்றுள்ள மும்பை இந்தியன் அணி சார்பில் முடிவு எடுக்கும் இடத்தில் டெண்டுல்கர் இருப்பதாகவும், இதற்காக அவருக்கு சன்மானம் வழங்கப்படுவதாகவும் மத்திய பிரதேச கிரிக்கெட் சங்க உறுப்பினர் சஞ்சீவ் குப்தா புகார் கூறியிருந்தார்.

இதனையடுத்து, கிரிக்கெட் சங்க பிரச்சினைகளை தீர்த்து வைக்க நியமிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி டிகே.ஜெயின், விளக்கம் கேட்டு சச்சின் டெண்டுல்கருக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

இது தொடர்பாக 14  விளக்கத்தை சச்சின் டெண்டுல்கர் அனுப்பினார்.

அதில், மும்பை இந்தியன் அணியிடம் தான் பணம் ஏதும் பெறவில்லை என்றும், அந்த அணிக்காக எந்த முடிவையும் எடுப்பதில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் சச்சின் டெண்டுல்கர் மறுத்திருந்தார்.

 

 

கார்ட்டூன் கேலரி