கொரோனா சமீபத்திய தகவல்கள்: சிகிச்சையின் போது காற்று வழி பரவுமா COVID-19?

அதிக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது.

சிகிச்சை அல்லது மற்ற மருத்துவ நடைமுறைகளின் போது ஏரோசோல் மூலம் தனித்துவ கொரோனா வைரஸின் காற்றுவழி பரவல் ஏற்படலாம் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. மருத்துவ நடைமுறைகள் ஏதும் நடைபெறாத போதும் COVID-19 ஏரோசோல்கள் மூலமாகவும் பரவக்கூடுமா  என்பதைப் பற்றி ஆய்வு நடைபெற்று வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. இன்றைய நிலவரப்படி இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 11 இலட்சத்தை நெருங்கிக் கொண்டுள்ளது. மேலும், இன்றுவரை 6.8  லட்சம் நோயாளிகள் மீட்கப்பட்டுள்ளனர். அதிகாரபூர்வ தகவல்களின்படி, வைரஸ் தொற்று காரணமாக 26, 828 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழக அமைச்சர் திரு. செல்லூர் கே. ராஜு  அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டார். இதுவரை 11 தமிழ்நாட்டு எம்.எல்.ஏ.க்கள் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உத்தரபிரதேசத்தில் தனித்துவ கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க, யோகி ஆதித்யநாத் அரசு  மூன்று நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தியது. மேலும், நோய்த்தொற்றின் சமீபத்திய நிலவரத்தை ஆய்வி செய்தபின், மேற்படி நடவடிக்கைகள் முடிவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஊரடங்கின் போது தலைமைச் செயலாளர் அந்த உத்தரவின் பேரில், அனைத்து அலுவலகங்களும் சந்தைகளும் மூடப்பட்டுள்ளன.  இருப்பினும் மருத்துவம், சுகாதார சேவைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கையாளுதல் மற்றும் உலக நாடுகளின் நடவடிக்கைகளை ஆய்வு செய்து மறுபரிசீலனை செய்ய ஒரு ஆய்வுக் குழுவை  உலக சுகாதார அமைப்பு (WHO) அமைத்துள்ளது. இந்த குழு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தால் உலகளாவிய அளவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளது.

இன்றைய நிலவரப்படி உலகளவில், அமெரிக்கா (3,833,271) மற்றும் பிரேசில் (2,075,246) ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில்  இந்தியா (1,077,864) மூன்றாவது இடத்தில் உள்ளது.