சென்னை: தமிழக சட்டமன்றத்தின் 3வது கூட்டத்தொடரான இன்று முதல்வர் எடப்பாடி பழனிச் சாமி விதி எண் 110ன் கிழ் உரையாற்றினார். அப்போது, தமிழகத்தில் வரதட்சணை கொடுமை, பாலியல் விவகாரம், பெண்களை கிண்டல் செய்வது போன்றவற்றிற்கான தண்டனையை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளதாக கூறினார்.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், கூட்டப்பட்டுள்ள தமிழக சட்டப்பேரவையில் மழைக்கால கூட்டத்தொடர் 3 நாட்கள் மட்டுமே நடைபெற உள்ளது. இன்று  கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது.

இந்த நிலையில்  விதி 110ன் கீழ் முதல்வர் சட்டப்பேரவையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், பெண்கள் மீதான குற்றங்களை குறைக்கும் வகையில், தண்டனையை அதிகப்படுத்தும் நோக்கில் அறிவித்தான்.

அதன்படி, த

தமிழகத்தில் வர தட்சணை கொடுமைக்கான தண்டனையை 10 ஆண்டாக உயர்த்த வேண்டும் .

பெண்களை பின்தொடருவோருக்கான தண்டனையை 5 ஆண்டில் இருந்து 7 ஆண்டாக உயர்த்த வேண்டும் 

18 வயதுக்கு உட்பட்ட பெண்களை பாலியல் தொழிலுக்கு வழிபடுத்தினால் ஆயுள்தண்டனை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.