டெல்லி, 

ங்கியில் குறைந்தபட்ச இருப்புத்தொகை இல்லையென்றால் கட்டணம் வசூலிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யும்படி ஸ்டேட்வங்கிக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. எச்.டி.எப்.சி., ஐ.சி.ஐ.சி.ஐ. ஆக்சிஸ் உள்பட சில தனியார் வங்கிகள் பணம் டெபாசிட் செய்வதற்கும், பணம் எடுப்பதற்கும் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

ஒரு மாதத்துக்கு 4 தடவைக்கு மேல் பணம் எடுக்கப்பட்டாலும், செலுத்தினாலும் ரூ.150 கட்டணம் வசூலிக்கப்படும் என்று வங்கிகள் அறிவித்துள்ளன. இது இந்தியா முழுவதும் இருக்கும் வங்கி வாடிக்கையாளர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஸ்டேட் வங்கியும் கூடுதல் பணப் பரிவர்த்தனை செய்தால் ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் வங்கியில் குறைந்த பட்சம் ரூ. 5 ஆயிரம் இருப்பு வைத்திருக்கவேண்டும் உள்பட சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதன்படி பெரு நகரங்களில் வசிக்கும் வாடிக்கையாளர்கள் வங்கிக் கணக்கில் குறைந்த பட்சம் ரூ.5 ஆயிரம் இருப்பு வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதுபோல நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் ரூ.3 ஆயிரம், புறநகர் பகுதிகளில் வசிப்பவர்கள் ரூ.2 ஆயிரம்,  கிராமங்களில் வசிப்பவர்கள் ரூ.ஆயிரம் கட்டாயம் கணக்கில் வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் அபராதம் விதிக்கப்படும் என்று ஸ்டேட் வங்கி கூறியுள்ளது. ஸ்டேட் வங்கியின் இந்த நடவடிக்கை கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி யுள்ளது.
இதுகுறித்து மத்தியஅரசு அதிருப்தி வெளியிட்டுள்ளது. அதில் ஏப்ரல் 1-ந் தேதி முதல் கொண்டு வர திட்டமிட்டுள்ள வாடிக்கையாளர்களின் குறைந்தபட்ச இருப்புத்தொகை உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகளை ஸ்டேட்வங்கி மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.