டில்லி

புல்வாமா தாக்குதலில் ஜெய்ஷ் ஈ முகமது இயக்கம் ஈடுபட்டதற்கான ஆவணங்களை ஐநா அளித்த தீவிரவாத முகாம்களின் விவரங்களுடன் பாகிஸ்தானுக்கு இந்தியா கொடுத்துள்ளது.

காஷ்மீர் மாநிலத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர்.   அதற்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ் ஈ முகமது இயக்கம் பொறுப்பேற்றுக் கொண்டது.  ஆயினும் பாகிஸ்தான் அந்த இயக்கத்தை கண்டிக்காமல்  அதற்கான ஆவணங்களை கேட்டது.  அந்த இயக்கம் மேலும் தாக்குதல் நடத்த உள்ளதாக தகவல்கள் வந்தன்.

அத்துடன் அந்த இயக்கம் எல்லைப் பகுதியில் முகாமிட்டிருந்ததும் கண்டறியபபட்டது.   இந்திய விமானப்படை அந்த முகாம் மீது தாக்குதல் நடத்தி அவர்களை அடியோடு அழித்தது.   அதற்கு பதிலடியாக பாகிஸ்தான் எல்லை தாண்டி வந்து இந்தியா மீது  தாக்குதல் நடத்தியது.  விரட்டிச் சென்ற இந்திய விமானத்தை சுட்டு வீழ்த்தி விமானியை பாகிஸ்தான் சிறை பிடித்தது.

இந்த தாக்குதல்களுக்கு நேரில் பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவிக்க இந்தியாவில் உள்ள தற்காலிக பாகிஸ்தான் தூதருக்கு உள்துறை அமைச்சரகம் சம்மன் அனுப்பியது.   அதை ஒட்டி அவர் நேரில் அமைச்சரக அதிகாரிகள் முன்பு ஆஜரானார்.   அப்போது பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அத்துடன் அவரிடம் ஒரு கோப்புகளின் தொகுப்பும் அளிக்கப்ப்ட்டுள்ளது.

இது குறித்து உள்துறை அமைச்சரக அதிகாரி ஒருவர்.“பாகிஸ்தான் தூதர் நேரில் ஆஜரான போது அவரிடம் ஒரு கோப்புகளின் தொகுப்பு அளிக்கப் பட்டுள்ளது.   அதில் புல்வாமா தாக்குதலில் ஜெய்ஷ் ஈ முகமது இயக்கம் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன.  அது மட்டுமின்றி நாட்டில் தீவிரவாத இயக்கங்கள் எங்கெங்கு உள்ளன என ஐநா அளித்த விவரங்களும் உள்ளன’ எனதெரிவித்தார்.