குணமடைந்த பெரும்பாலான COVID-19 நோயாளிகள் இதய பாதிப்பைக் கொண்டுள்ளனர்: ஒரு ஆய்வு முடிவு

JAMA கார்டியாலஜி ஆய்விதழில் திங்களன்று வெளியிடப்பட்ட புதிய ஆய்வில், குணமடைந்த COVID-19 நோயாளிகளில் 78 சதவீதம் நிரந்தர இதய பாதிப்பு கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரஸிலிருந்து மீண்ட 100 பேரின் இருதய எம்.ஆர்.ஐ.க்களைப் ஃபிராங்பேர்ட் பல்கலைக்கழக மருத்துவமனை ஆய்வு செய்தது. குணமடைந்த COVID-19 நோயாளிகளில் கிட்டத்தட்ட 80 சதவீதம்பேரின் இதயக் கட்டமைப்பில் மாற்றங்கள் ஏற்பட்டிருந்ததாக இதயப் படங்கள் காட்டின. அறுபது சதவிகித நோயாளிகளுக்கு குணமடைந்த பிறகும் இதய தசை வீக்கம் இருந்தது தெரியவந்துள்ளது. ஆனால், யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை. பெரிய பாதிப்புக்குரிய அறிகுறிகளும் எதுவுமில்லை.

கொரோனா வைரஸ் இதய அறிகுறிகளுடன் வலுவாக தொடர்புபடுத்தப்படவில்லை என்றாலும், வைரஸை எதிர்த்துப் போராடுவதில் தசை முக்கிய பங்கு வகிக்கிறது என்று ஆய்வுக்கு தலைமை தாங்கிய டாக்டர் வாலண்டினா பன்ட்மேன் STAT இடம் கூறினார். “மீட்கப்பட்ட” [நோயாளிகளில்] 78 சதவிகித நோயாளிகளில் இதய தசைகள் தொடர்ந்து நோயெதிர்ப்பு செயல்பாடுகளில் ஈடுபாடு கொண்டிருப்பதற்கு இவை ஆதாரமாக இருக்கின்றன,” என்றார்.

மார்ச் மாதத்திலிருந்து சீனாவின் வுஹானில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 19 சதவீத நோயாளிகளுக்கு இருதய காயம் இருப்பது கண்டறியப்பட்டது முதன் முதலில் கண்டறியப்பட்டது. வைரஸின் நீண்டகால விளைவுகள் தெரியவில்லை என்றாலும், இப்போதைய சூழ்நிலையில் இந்த ஆய்வுகள் குணமடைந்த பின்னரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இருதய அமைப்புகளுக்கு தீங்கு ஏற்படும் என்றே கூறுகின்றன. ஏற்கனவே பல்வேறு உடல்நலக் குறைபாடு கொண்டவர்கள் பொதுவாக இந்த நெருக்கடியான களத்தில் அதிக பாதிப்புக்கு உள்ளாகும் நிலையில் இருப்பவர்களாக அறியப்படுகின்றனர். உயர் இரத்த அழுத்தம், கரோனரி தமனி நோய் அல்லது இதய செயலிழப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் குறிப்பாக தொற்று மற்றும் இறப்புக்கான அபாயத்தில் உள்ளனர்.

 

கொரோனா வைரஸைப் பற்றி மேலும் ஆய்வுகள் நடத்தியதில், அதன் நீடித்த அறிகுறிகள் மற்றும் தொடர்புடைய நோய்த்தொற்றுகள் பற்றிய தகவல்கள் தெரிய வந்துள்ளன. டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவருக்கு 54 நாட்களுக்கு COVID-19 இருப்பதாகக் கூறப்படுகிறது, அவரது அறிகுறிகள் நீடித்ததால் மூன்று முறை பரிசோதிக்கப்பட்டு பாசிடிவ் முடிவுகள் பெறப்பட்டன. பெரும்பாலான நோயாளிகள் இரண்டு வாரங்களுக்குள் குணமடைவார்கள் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பிற ஆரம்ப ஆய்வுகளில் வைரஸ் தொற்றின் விளைவாக, இரத்தம் உறைவு, பக்கவாதம், நுரையீரல் பாதிப்பு மற்றும் வாசனை மற்றும் சுவை இழப்பு போன்ற நரம்பியல் அறிகுறிகளும் இருக்கலாம் என்று சுட்டிக்காட்டியுள்ளன.

COVID-19 இன் மிக உடனடி தாக்கமாக சுவாசக் கட்டமைப்புகள் உள்ளன. கொரோனா வைரஸின் கடுமையான பாதிப்பு உள்ளவர்கள் உயிருக்கு ஆபத்தான நிமோனியாவை எதிர்கொண்டுள்ளனர். பாதிக்கப்பட்ட நோயாளிகளில் சுமார் 20 சதவீதம் பேர் நிமோனியாவுக்கு சிகிச்சையளிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலையை அடைந்தனர். கொலம்பியா தொற்றுநோயியல் பேராசிரியர் ஸ்டீபன் மோர்ஸ் நியூஸ் வீக்கிற்கு அளித்த பேட்டியில், இந்த நீண்டகால தாக்கங்கள் ஆச்சர்யம் அளிக்கவில்லை என்றும், தொற்று ஒரு விளைவாக மாறும்போது கண்காணிப்பும், கட்டுப்பாடும் மிகவும் கடினம் என்று கூறியுள்ளார்.

“இரத்தஓட்ட மண்டலத்தில் நோய் பாதிப்புகளை கொண்டிருக்கும் குழந்தைகள் என்ன மாதிரியான விளைவுகளை பெறுவார்கள் என நங்கள் கவலையுடன் கண்காணித்து வருகிறோம்.” என்று மோர்ஸ் கூறினார். “அப்போதைய சூழ்நிலைகளில், கொரோனா வைரஸுடன் நமக்கு குறைவான அனுபவமே இருந்ததால், நாங்கள் வழக்கத்தை விட அதிக கவனம் செலுத்தினோம். ” ஜூலை 29, புதன்கிழமை நிலவரப்படி, உலகளவில் 16 மில்லியனுக்கும் அதிகமான வழக்குகள் பதிவாகியுள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கண்காணிப்பாளரின் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்டவர்களில், 9,807,900 பேர் உலகளவில் COVID-19-லிருந்து மீண்டுள்ளனர்.

ஸ்பெயின், பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் நோய் தொற்று உறுதியான நோயாளிகளின் எண்ணிக்கை மீண்டும் உயரத் தொடங்கியதும், ஐரோப்பா இரண்டாவது அலை கொரோனா வைரஸ் பரவலுக்கு அஞ்சுகிறது. ஆசியாவின் பல நாடுகளும் தொற்றுநோயில் இருந்து மீண்டன. ஏப்ரல் மாதத்தில், சீனா தனது தினசரி எண்ணிக்கையில் அதிக பட்ச  எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. வைரஸின் முதல் அலையின் உச்சத்தில் இருக்கும் யு.எஸ். முழுவதும், பல மாநிலங்கள் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு உலகளாவிய ஹாட் ஸ்பாட்களாக உருவெடுத்துள்ளன.

Thank you: News Week

Author: KATHERINE FUNG

கார்ட்டூன் கேலரி