Random image

விஜய் மல்லையாவின் இந்திய சொத்துக்கள் விற்பனை மூலம் ரூ.963 கோடி வரவு…..எஸ்பிஐ

டில்லி:

பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா இந்திய வங்கிகளிடம் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி விட்டார். பிரிட்டனுக்கு தப்பி சென்ற மல்லையாவை தேடப்படும் குற்றவாளியாக இந்தியா ஏற்கெனவே அறிவித்தது. அவரை இந்தியா அழைத்து வர பிரிட்டன் அரசு மூலம் மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் பிரிட்டன் உயர் நீதிமன்றம் நேற்று ஒரு உத்தரவை வெளியிட்டது. அதில், பிரிட்டனில் உள்ள மல்லையா சொத்துக்களின் சோதனையிடவும், அவற்றை தேவைப்பட்டால் பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டது.
இது மல்லையாவுக்கு எதிராக வழக்குத் தொடுத்திருக்கும் இந்திய வங்கிகளுக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.

இந்நிலையில் எஸ்பிஐ நிர்வாக இயக்குனர் அரிஜித் பாசு டில்லியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘இங்கிலாந்து உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்புக்குறியது.

இந்த உத்தரவால் கடன் பாக்கியை வசூலிக்க விஜய் மல்லையாவின் சொத்துகளை பின் தொடர முடியும். விஜய் மல்லையாவின் இந்திய சொத்துகளை ஏலத்தில் விற்பனை செய்தது மூலம் வங்கிகள் கூட்டமைப்புக்கு ரூ.963 கோடி கிடைத்துள்ளது’’ என்றார்.