இந்தியாவில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைவோர் விகிதம் 90 சதவிகிதத்தை எட்டுகிறது! ஐசிஎம்ஆர்

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைவோர் விகிதம் அதிகரித்து வருவதாகவும், தற்போதைய நிலையில், 90 சதவிகிதத்தை எட்டுவதாகவும்  ஐசிஎம்ஆர் தெரிவித்து உள்ளது.

கடந்த மாதம் (செப்டம்பர்) 16-ஆம் தேதி நிலவரப்படி கொரோனா தொற்று பாதிப்பு  50 லட்சத்தையும், கடந்த மாதம் (செப்டம்பர் )  28-ஆம் தேதி 60 லட்சத்தையும், கடந்த (நவம்பர்)  11-ஆம் தேதி 70 லட்சத்தையும் கடந்திருந்த நிலையில், தற்போது தொற்று பாதிப்பு 60ஆயிரத்து கீழ் வந்துள்ளது. இன்று நான்காவது நாளாக 60,000-க்கும் கீழ் தினசரி  பாதிப்பு பதிவாகியுள்ளது.

மத்தியசுகாதாரத்துறை இன்றுகாலை வெளியிட்டுள்ள  தகவலின்படி, நாடு முழுவதும், கடந்த  24 மணி நேரத்தில் 55,366 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், இதன் மூலம் ஒட்டு மொத்தமாக நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 77,61,312-ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும்  690 போ உயிரிழந்தனா். அதன் காரணமாக ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,17,306-ஆக அதிகரித்தது.

இது ஒட்டுமொத்த கொரோனா பாதிப்புடன் ஒப்பிடுகையில் 1.51 சதவீதமாக உள்ளது.

அதே வேளையில்,  நோய்த்தொற்றிலிருந்து நேற்று ஒரே நாளில் 73,979 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக, தொற்று பாதிப்பிலிருந்து  குணமடைந்தோரின் எண்ணிக்கை 69,48,497-ஆக அதிகரித்துள்ளது.

இது ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 89.53 சதவீதமாகும்.

தற்போதைய நிலையில்,  நாடு முழுவதும்  6,95,509 பேர் கொரோனா  நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.  சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தொடா்ந்து 6-ஆவது நாளாக 8 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது.

சிகிச்சை பெறுவோரின் விகிதம் 8.96 சதவீதமாக குறைந்துள்ளது.

கொரோனா நோய்த்தொற்று பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலம் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.   மகாராஷ்டிரத்தில் 42,633 பேரும், கா்நாடகத்தில் 10,696 பேரும், உத்தர பிரதேசத்தில் 6,755 பேரும், ஆந்திரத்தில் 6,508 பேரும், மேற்கு வங்கத்தில் 6,244 பேரும், தலைநகர் டெல்லியில் 6,128 பேரும், பஞ்சாபில் 4,060 பேரும், குஜராத்தில் 3,660 பேரும் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

நாடு முழுவதும்  நேற்று (வியாழக்கிழமை  ஒரே நாளில் 14,42,722 பேருக்கு கொ ரோனா நோய்த்தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், கடந்த 22-ஆம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக 10,01,13,085  பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்)  தெரிவித்து உள்ளது.