கொரோனா மருத்துவப் பணியாற்ற தெற்கு மண்டல ரயில்வே அழைப்பு…

சென்னை

சென்னை அரக்கோணத்தில் தெற்கு மண்டல மருத்துமனை அமைந்துள்ளது. தற்போது அந்த மருத்துவமனையில்  கொரோனா சிகிச்சை பிரிவில் பணியாற்ற மருத்துவப் பணியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

மூன்று மாதங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் கொரோனா சிகிச்சை பிரிவில் பணியாற்ற மருத்துவர்கள், செவிலியர், லேப் டேக்னீஷியன், ரேடியோகிராஃபர், ஹாஸ்பிடல் அட்டண்டன்ட், ஹவுஸ்கீப்பிங் அசிஸ்டன்ட் ஆகிய பிரிவுகளில் 72 பணியிடங்களுக்கு  ஆட்கள் தேவை.

இது குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பை தெற்கு இரயில்வே வெளியிட்டுள்ளது.