ஒட்டாவா: மறுசுழற்சி என்பத ஒரு மிகபெரிய பொய், அதிகமாக பிளாஸ்டிக்கை விற்க இவ்வாறு கூறுகிறார்கள் என்று தொழில் வல்லுநர்கள் கூறி உள்ளனர்.

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க ஆலோசித்து வருவதாக கடந்த ஆண்டு கனடா கூறியது. இப்போது . 2021ம் ஆண்டு இறுதிக்குள் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளை தடை செய்ய போவதாக அறிவித்துள்ளது.
அந்நாட்டில் உள்ள பிரபல ஊடகம் நடத்திய ஆய்வில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு 250 சதவீதம் முதல் 300 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக்குளில் 10 சதவிதம் மட்டும் மறு சுழற்சி செய்யப்படுகின்றன என்றும் கூறி உள்ளது.
கடந்த ஏழு தசாப்தங்களாக, 10 சதவீதத்திற்கும் குறைவான பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளது. இது குறித்து சுற்றுச்சூழல் துறையைச் சேர்ந்த டேவிட் அலவே கூறியதாவது: மறு சுழற்சி செய்வது மற்றும் குறைப்பது மற்றும் மறுபயன்பாடு செய்வது பற்றி மட்டுமே. 1980களில், பிளாஸ்டிக் மீதான முழுமையான தடைக்கு பயந்து, உற்பத்தியாளர்கள் வேறு வழிகளைத் தேடினர் என்றார்.

புதிய முயற்சியை மேற்பார்வையிடும் பணியில் ஈடுபட்டிருந்த தொழில் துறை நிபுணரான ரொனால்ட் லைசெமரின் கூறுகையில், மறு சுழற்சி பணிகளை மேற்கொள்வது அவர்களின் தயாரிப்புகளை சந்தையில் வைத்திருக்க ஒரு வழியாகும் என்றார். மறுசுழற்சி செயல்படுவதாக பொது மக்கள் நினைத்தால், அவர்கள் சுற்றுச்சூழலைப் பற்றி அக்கறை கொள்ளப் போவதில்லை என்று தொழில்துறை அதிகாரி லாரி தாமஸ் தெரிவித்தார்.
சொசைட்டி ஆப் பிளாஸ்டிக் தொழிலின் முன்னாள் துணைத் தலைவரான லூயிஸ் ப்ரீமேன் கருத்துப்படி, இந்தத்துறையில் பலருக்கு தொடக்கத்திலிருந்தே மறுசுழற்சி செய்வது குறித்து சந்தேகம் இருந்தது. மறு சுழற்சி என்பது ஒரு குறிப்பிடத்தக்க வழியில் வேலை செய்யப்போகிறது என்ற உற்சாகமான நம்பிக்கை ஒருபோதும் இருந்ததில்லை என்று அவர் கூறி உள்ளார்.
பிளாஸ்டிக் கழிவுப் பிரச்சினையைத் தீர்க்க, மறுசுழற்சி செய்பவர்கள் 1990 களில் தங்கள் தயாரிப்புகளை சீனாவுக்கு விற்கத் தொடங்கினர். சீனா கடைசியாக 2018ல் இறக்குமதி செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை எடுத்துக்கொள்வதை நிறுத்தியது.
இப்போது, ​​இந்தோனேசியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகள் பிளாஸ்டிக் கழிவு சந்தையை மையப்படுத்தி உள்ளன. சில வட அமெரிக்க பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்பவர்கள் தங்கள் தயாரிப்புகள் உண்மையில் மறுசுழற்சி செய்யப்படுவதை உறுதிசெய்கிறார்கள் என்றாலும், பிளாஸ்டிக் கழிவுகள் இப்போது அங்கேயும் வளர்ந்து வரும் பிரச்சினையாக உள்ளது.