கொரோனா : சென்னையில் எந்த ஒரு பகுதிக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்படவில்லை

சென்னை

கொரோனா தொற்று காரணமாகச் சென்னையில் எந்த ஒரு பகுதிக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்படவில்லை எனச் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

தமிழகத்தில் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.  பாதிப்படைந்த 67 பேரில் ஈரோடு மாவட்டத்தில் 24 பேரும் சென்னையில் 22 பேரும் உள்ளனர்.  இன்று 17 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

சென்னை நகரில் அரும்பாக்கம்,புரசைவாக்கம், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம், சாந்தோம்,  ஆலந்தூர், போரூர் கோட்டூர்புரம் பகுதிகளில் கொரோனா நோயாளிகள் உள்ளனர்.

இந்த பகுதிகள் சென்னை மாநகராட்சியின் தீவிர கண்காணிப்பில் உள்ளன.  சென்னையில் எந்த ஒரு பகுதிக்கும் ரெட் அலர்ட் என்னும் தீவிர எச்சரிக்கை விடுக்கப்படவில்லை எனச் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

கார்ட்டூன் கேலரி