‘சர்கார் படத்துக்கு ரெட் கார்டு:’ தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலிடம் குறும்பட இயக்குனர் மனு

ன் மூவிஸ் தயாரிப்பில், இயக்குனர் ஏஆர்.முருகதாஸ் இயக்கி, நடிகர் விஜய் நடித்த சர்கார் படத்தின் கதை, திருட்டுக்கதைதான் என்று தென்னிந்திய திரைப்பட எழுந்தாளர்கள் சங்கம் கூறிய நிலையில், சர்க்கார்  படத்திற்கு ரெட் கார்டு தடை விதிக்கக் கோரி, குறும்பட இயக்குநர் அன்பு ராஜசேகர் என்பவர், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலிடம் மனு அளித்துள்ளார்.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சர்க்கார் படத்துக்கு தடை கோரி, வருண் என்பவர்  சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.  அவர் தாக்கல் செய்த மனுவில், சர்கார் படத்தின் கதையை செங்கோல் என்ற பெயரில், கடந்த 2007-ஆம் ஆண்டே பதிவு செய்திருப்பதாக கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதுகுறித்த விளக்கம் அளிக்க  பட தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ், தென்னிந்திய கதை ஆசிரியர்கள் சங்கத்துக்கு  உத்தரவிட்டிருந்தது.

அதைத் தொடர்ந்து, ​ “சர்கார் படத்தின் கதை திருடப்பட்டதுதான்!” தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் தெரிவித்து உள்ளது.

இந்த படத்தின் விசாரணை நாளை மீண்டும் வர இருக்கும் நிலையில், குறும்பட இயக்குநர் அன்பு ராஜசேகர் என்பவர், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலிடம் மனு அளித்துள்ளார்.

அவர் கொடுத்துள்ள மனுவில், விவசாயிகளின் பிரச்சனை மற்றும் தற்கொலையை மையமாக வைத்து, தாம் இயக்கிய தாகபூமி என்ற குறும்படத்தின் கதையை திருடி, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கத்தி படத்தை இயக்கினார்.

இது குறித்த வழக்கு தஞ்சை குற்றவியல் நீதிமன்றத்தில் 4 ஆண்டுகளாக நடைபெற்று வருவதால், தமது ஒட்டுமொத்த வாழ்வும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே,  தமக்கு நியாயம் கிடைக்கும் வரை, ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது இயக்கியுள்ள சர்கார் படத்திற்கு ரெட் கார்டு தடை விதிக்க வேண்டும் என தெரிவித்து உள்ளார்.

இந்த மனு விவகாரம் விஜய் தரப்பு மற்றும்  தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ்க்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.