கண் சிவந்தாலும் அது கொரோனா அறிகுறி : கனடா ஆய்வாளர்கள் எச்சரிக்கை

ட்டாவா

ருவருக்கு திடீரென கண்கள் சிவந்தால் அது கொரோனா அறிகுறியாக இருக்கலாம் எனக் கனடா நாட்டு ஆய்வாளர்கள்  எச்சரித்துள்ளனர்.

 

 

இருமல், ஜலதோஷம், காய்ச்சல், மூச்சுத் திணறல் போன்றவை கொரோனாவுக்கு அறிகுறியாக, கூறப்படுகிறது.  அத்துடன் திடீர் எனச் சுவை அறியா நிலை மற்றும் வாசனை அறியாத நிலை ஆகியவை கொரோனா தாக்குதல் அறிகுறியாகக் கூறப்படுகிறது.   அதே வேளையில் ஒரு சிலருக்கு இந்த அறிகுறிகள் ஏதுமின்றி கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் கனடா நாட்டு ஆய்வாளர்கள் கண்கள் சிவப்பதும் கொரோனா அறிகுறிகளில் ஒன்று என எச்சரிக்கின்றனர்.  சமீபத்தில் கனடா நாட்டில் ஒரு பெண்ணுக்குக் கண்கள் சிவந்திருந்த அறிகுறியைத் தவிர வேறு அறிகுறிகள் இல்லை எனவும் அவருக்குச் சோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டதையும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே மேலும் சிலருக்குக் கண்வலி மற்றும் கண் சிவப்பு அறிகுறிகள் மட்டுமே இருந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.   ஆகவே கண்வலி, மற்றும் கண் சிவப்படைதல் போன்றவற்றை அலட்சியம் செய்யாமல் உடனடியாக கவனிக்க வேண்டும் என அந்த அறிஞர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.