க்களை ஒருபகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு சாலை மார்க்கமாக அழைத்து செல்லும் டாக்ஸியை போல,  வான் வழியாக  அழைத்து செல்லும் ட்ரோன் டாக்ஸிகள் விரைவில் புழக்கத்துக்கு வர இருக்கின்றன.
trone1
சீன நிறுவனம் தயாரித்துள்ள Ehang-184 எனும் டாக்ஸி ட்ரோனை சோதிக்க அமெரிக்காவின் நெவடா மாகாண நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.  இந்த புதிய ட்ரோன் டாக்ஸியானது குறைந்த உயரத்தில் பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. ஒரே ஒரு நபரை ஏற்றிச் செல்லும் வசதிகொண்ட ட்ரோன் டாக்ஸி,  தானியங்கியாக இயங்கக் கூடியது. செல்போன் ஆப் மூலம் கட்டுப்படுத்தக் கூடிய இந்த ட்ரோன் டாக்ஸியில்  செல்லவேண்டிய இடத்தை முன்பாகவே செல்போன் ஆப்பில் பதிவிட்டுவிட்டால் சரியான இடத்திற்கு, குறித்த நேரத்தில் கொண்டு சேர்த்துவிடும்.